1964
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1964 (MCMLXIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 22 – கென்னத் கவுண்டா வட ரொடீசியாவின் முதலாவது அதிபரானார்.
- சனவரி 30 – தெற்கு வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் (Nguyen Khanh) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- பெப்ரவரி 11 – கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் சைப்பிரசில் போர் மூண்டது.
- மார்ச் 27 – அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (9.2 ரிக்டர் அளவு) அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 5 – பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஃபி இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- ஏப்ரல் 7 – ஐபிஎம் ('IBM) தனது சிஸ்டம்/360 ஐ அறிவித்தது.
- ஏப்ரல் 26 – தங்கானிக்கா, சன்சிபார் இரண்டும் இணைக்கப்பட்டு தான்சானியா நாடாகியது.
- சூன் 8 – இலங்கையில் பழம்பெரும் இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி இரண்டாகப் பிரிந்தது. அதிருப்தியாளர்கள் இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தனர்.[1]
- சூலை 6 – ஆப்பிரிக்காவின் மலாவி நாடு விடுதலை அடைந்தது.
- சூலை 28 – அமெரிக்காவின் நாசா ரேஞ்சர்-7 என்ற விண்கலம் நிலவை புகைப்படம் எடுத்தது.
- திசம்பர் 22-25 – தனுஷ்கோடி புயல்: இந்தியாவின் தென்முனையில் தனுஷ்கோடியையும், இலங்கையின் வடக்குப் பகுதியையும் பெரும் புயல் தாக்கியதில் 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தனுஷ்கோடி நகரம் முழுவதும் புயலால் அழிந்து போனது.
பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 6 – டேவிட் வூடார்ட், அமெரிக்க எழுத்தாளர், இசைக்கலைஞர்
- மே 29 – ஆறுமுகன் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி (இ. 2020)
இறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 21 – பாரதிதாசன், தமிழ்க் கவிஞர் (பி. 1891)
- நவம்பர் 25 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (பி: 1893)
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் – சார்லசு டவுன்சு, நிக்கொலாய் பாசொவ், அலெக்சாந்தர் புரொகோரொவ்
- வேதியியல் – டோரதி ஓட்ச்கின்
- மருத்துவம் – கொன்ராட் புளொக், பியோதர் லினென்
- இலக்கியம் – இழான் பவுல் சார்த்ர
- அமைதி – மார்ட்டின் லூதர் கிங்
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1964 முக்கிய சம்பவங்கள், ஈழநாடு, 31 திசம்பர் 1964