1284
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1284 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1284 MCCLXXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1315 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2037 |
அர்மீனிய நாட்காட்டி | 733 ԹՎ ՉԼԳ |
சீன நாட்காட்டி | 3980-3981 |
எபிரேய நாட்காட்டி | 5043-5044 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1339-1340 1206-1207 4385-4386 |
இரானிய நாட்காட்டி | 662-663 |
இசுலாமிய நாட்காட்டி | 682 – 683 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1534 |
யூலியன் நாட்காட்டி | 1284 MCCLXXXIV |
கொரிய நாட்காட்டி | 3617 |
1284 (MCCLXXXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]ஆப்பிரிக்கா
[தொகு]- அபூ ஆப்சு உமர் 1283 இல் தனது சகோதரனை ஆட்சியில் இருந்து அகற்றிய கிளர்ச்சியை அடக்கி தூனிசை மீண்டும் கைப்பற்றினான்[1]
- அராகனின் மூன்றாம் பீட்டர் மன்னர் அப்சிது வம்சத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஜெர்பா தீவை முற்றுகையிட்டு, அங்குள்ள மக்களை அழித்து, தீவைக் கைப்பற்றினான்.[1]
ஆசியா
[தொகு]- எகிப்தின் மம்லுக் சுல்தான் அல் மன்சூர் கலாவுன் எருசலேமுடன் 10 ஆண்டு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டான்.
- நொகாய் கான் தலைமையில் மங்கோலிய தங்க நாடோடிக் கூட்டம் அங்கேரியை இரண்டாவது தடவையாகத் தாக்கியது.
- திரால்லெசு என்ற பைசாந்திய நகரம் துருக்கிய அமீரகம் மெந்தேசிடம் சரணடைந்தது. 20,000 பேர் அடிமைகளாயினர்.
ஐரோப்பா
[தொகு]- மார்ச் 3 – வேல்சில் ஆங்கிலச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[2]
- சூன் 5 – நாபொலியின் இரண்டாம் சார்லசு மன்னர் அராகனின் மூன்றாம் பீட்டர் மன்னரின் தளபதியினால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
- ஆகத்து 5–6 – பீசா குடியரசு மெலோரியா சமரில் இத்தாலிய நகர அரசான செனோவாக் குடியரசினால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் நடுநிலக் கடல் பகுதியில் அதன் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது.
- செர்பியாவின் இளவரசர் அங்கேரி மன்னரின் உடன்பிறவா சகோதரியை மணமுடித்ததை அடுத்து, செர்பிய மன்னர் ஸ்டெஃபான் திராகுத்தீன் பெல்கிறேட், சிர்மியா ஆகிய நகரங்களை அங்கேரியிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
- நோர்வே செருமானியக் கப்பல் ஒன்றைக் கொள்ளையடித்ததை அடுத்து, செருமானிய இராச்சியம் நோர்வே மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது.[3]
- செருமானியின் ஆம்பர்கு நகரம் தீயினால் அழிந்தது.
வேறு
[தொகு]- கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் மிகப்பழைய கல்லூரி பீட்டர்ஹவுஸ் இங்கிலாந்தில் திறக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- குலசேகர சிங்கையாரியன், யாழ்ப்பாண மன்னர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Meynier, Gilbert (2010). L'Algérie cœur du Maghreb classique. De l'ouverture islamo-arabe au repli (658-1518). Paris: La Découverte. pp. 161–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-7071-5231-2.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 148–150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ "Lecture on Economics in 1284". Stanford University. Archived from the original on September 27, 2011.