[go: up one dir, main page]

Privacy, Safety, and Policy Hub

டிஜிட்டல் நல்வாழ்வு அட்டவணையை அறிமுகப்படுத்துகிறோம்

பிப்ரவரி 2023

Snap -ல் , Snapchat சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை. Snapchat இல் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பாலிசிகளும் விதிமுறைகளும் இருக்கிறது Snapchat பயனர்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் கருவிகள் மற்றும் வளங்களை நாங்கள் வழங்குகிறோம், மேலும் இளைஞர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க நாங்கள் தொழில் மற்றும் தொழில்நுட்ப துறையில் மற்றவர்களுடன் ஈடுபடுகிறோம்.

டீனேஜர்கள் மற்றும் இளைஞர்கள் ஆன்லைனில் உட்பார்வை பெற நாங்கள் Generation Zகளின் டிஜிட்டல் நல்வாழ்வில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் கணக்கெடுப்பில் டீனேஜர்கள்(13-17 வயது) ,இளைஞர்கள்( 18-24வயது) மற்றும் பெற்றோர்கள் ,ஆறு நாடுகளில் 13 முதல்19 வயது : ஆஸ்திரேலியா, பிரான்ஸ்,ஜெர்மனி ,இந்தியா,இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா. இந்த ஆய்வு டிஜிட்டல் நல்வாழ்வு அட்டவணை (DWBI) ஒன்றை தயாரித்தது: Gen Z's ஆன்லைன் நல்வாழ்வில் ஒரு நடவடிக்கை.


2022-ஆம் ஆண்டுக்கான DWBI

ஆறு புவியியல் மண்டலங்களுக்கான முதல் டிஜிட்டல் நல்வாழ்வு அட்டவணை 62 இல் உள்ளது, 0 முதல் 100 இல் சராசரியாக கணக்கிட்டால்- ஆதரவாகவும் இல்லை வருத்தத்திற்குரியதாகவும் இல்லை . ஒவ்வொரு நாட்டின் பிரகாரம், இந்தியா 68 புள்ளிகளுடன் அதிக DWBI வரிசையில் முதலிடம் பதிவு செய்துள்ளது மற்றும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆறு நாட்டின் சராசரிக்கும் கீழே 60 புள்ளிகளை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா இன் DWBI 63 ஆகும்; இங்கிலாந்து 62 மற்றும் அமெரிக்கா 64 ஆக பதிவு செய்தது.

இந்த அட்டவணை PERNA மாதிரியை பயன்படுத்துகிறது, தற்போதைய ஆராய்ச்சிபடி 20 உணர்வு கூற்றுகள் 5 வகைகளாக பிரிக்கப்படுகிறது: நேர்மறை உணர்வு, ஈடுபாடு, உறவுகள் , எதிர்மறை உணர்வு மற்றும் சாதனைகள் எதிர்மனுதாரர்கள் இந்த 20 கூற்றுகளின் பேரில் ஒப்புதல் தெரிவிக்க கடந்த மூன்று மாதங்களில் தங்களுக்கு கிடைத்த ஆன்லைன் அனுபவங்கள் (snapchat தவிர) அல்லது வேறு கருவிகள் மூலம் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் சொல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். (இந்த ஆராய்ச்சி ஏப்ரல் 22 முதல் மே 10 2022 வரை நடத்தப்பட்டது) ஐந்து வகைகளுக்கும் ஒரு சான்று. அனைத்து 20 DWBI உணர்வுக் கூற்றுகளை பார்க்க இந்த இணைப்பை பார்க்கவும்.

சமூக ஊடங்கங்களின் பங்கு

ஒவ்வொரு பதிலளிப்பவரின் 20 உணர்வுத் கூற்றின் அடிப்படையில் DWBI கணக்கிடப்படுகிறது. அவற்றின் மதிப்புகள் நான்கு DWBI குரூப்களாக பிரிக்கப்படுகிறது: செழிப்பு (10%); விருத்தி (43%), நடுநிலை(40%) மற்றும் போராட்டம்(7%) (கூடுதல் விவரங்களுக்கு, கீழே பார்க்கவும்.)



ஆராய்ச்சியில் பார்க்கும்போது சமூக வலைத்தளங்கள் Gen Z's டிஜிட்டல் நல்வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதில் நான்கில் மூன்று பங்கிற்கும்(78%) மேலான பதிலளிப்பவர்கள் சமூக வலைத்தளங்கள் தங்கள் வாழ்கை தரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்வதில் ஆச்சரியம் இல்லை. இந்த நம்பிக்கை Gen Z இளைஞர்கள் (71%) பெண்களோடு (75%) பார்க்கும்போது டீனேஜர்கள்(84%) மற்றும் ஆண்கள் (81%) மத்தியில் அதிகம் என்று தெரிகிறது. Gen Z இளைஞர்களை காட்டிலும் சமூக வலைதளத்தின் தாக்கத்தை பற்றி பெற்றோர்களின் கருத்து(73%) விஞ்சியது. நல்ல செழிப்பானவர்கள் சமூக வலைத்தளம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது (95%) என்றும் போராடுகிறவர்களுக்கு அவ்வளவாக நல்ல தாக்கம் இல்லை (43%) என்கிறார்கள். செழிப்பானவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானவர்கள்(36%), "சமூக வலைத்தளம் இல்லாமல் என்னால் வாழ முடியாது "என்று ஒப்புக்கொள்கிறார்கள் , ஆனால் போராடுகிறவர்கள் வெறும் 18% பேர் தான் ஒப்புக்கொண்டனர். இந்த சதவீதங்கள், " சமூக வலைத்தளங்கள் மட்டும் இல்லையென்றால் இந்த உலகம் சிறப்பாக இருக்கும்" என்ற கூற்றுக்கு நேரெதிராக இருக்கிறது. (செழிப்பு: 22%, போராட்டம்: 33%)


மற்ற முக்கிய முடிவுகள்

எங்கள் டிஜிட்டல் நல்வாழ்வு ஆராய்ச்சி இன்னும் சில சுவாரசியமான விஷயங்களை கண்டுபிடித்துள்ளது. கீழே சில சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முழு அறிக்கையை இங்கே பார்க்கலாம் .

  • டிஜிட்டல் நல்வாழ்வு ஆன்லைனின் தரம் மற்றும் இயல்பை சார்ந்து இருக்கிறதே தவிர எவ்வளவு நேரம் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துகிறோம் என்பதை பொருத்தில்லை.

  • குறிபார்த்து தாக்கப்படும் அபாயங்களுக்கு (எ.கா., கொடுமைப்படுத்துதல், பாலியல் தொந்தரவு ) டிஜிட்டல் நல்வாழ்வு நல்ல ஒரு தீர்வாகும் , ஆனால் "சாதாரண" அபாயங்களுக்கு (எ.கா., ஆள்மாறாட்டம், தவறான தகவல் ) பெரிதளவில் உதவாது
    .

  • பெற்றோர்கள் தங்கள் டீனேஜர்களின் டிஜிட்டல் நல்வாழ்வில் அதிக அக்கறை உடையவர்களாக இருக்கிறார்கள். சொல்லப்போனால், எந்த டீனேஜர்களுடைய பெற்றோர்கள் தொடர்ந்து தங்கள் பிள்ளைகளின் ஆன்லைன் மற்றும் சமூக வலைதள செயல்களை செக் செய்கிறார்களோ அவர்கள் அதிகமான டிஜிட்டல் நல் வாழ்வையும் பெற்றோர்களின் நம்பிக்கையையும் சம்பாதித்திருக்கிறார்கள். மாறாக , அவ்விதமாக செய்யாத பெற்றோர்கள் தங்கள் டீனேஜர்களை ஆபத்தில் சிக்க வைக்கிறார்கள் (கிட்டத்தட்ட 20 புள்ளிகள்).

  • Gen Zயர்கள் ஏராளமான நெட்ஒர்க் உதவிகளோடு மிகவும் செழிப்பாவாகவும் விருத்தியாகவும் உள்ளனர், மிக குறைவாகவே நடுநிலையாகவும் போராட்டமாகவும் இருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. ஆதரவளிக்கும் சொத்துக்கள் யாரென்றால் இளைஞர்களின் வாழ்க்கையில் - பெற்றோர்கள், அக்கறையுள்ளவர்கள் , ஆசிரியர்கள் , நம்பிக்கையான பெரியவர்கள் அல்லது நண்பர்கள் - அவர்கள் மேல் அக்கறையுள்ளவர்கள் , அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பவர்கள் அல்லது அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அவர்கள் மேல் நம்பிக்கை வைப்பவர்கள்.


கூடுதல் விவரங்களுக்கு மற்றும் உங்கள் நாட்டிலுள்ள வளங்களை அறிய கீழே இருக்கும் எங்கள் டிஜிட்டல் நல்வாழ்வு அட்டவணையை பார்க்கவும்.


DWBI டெக் - பிரிட்டிஷ் ஆங்கிலம்

DWBI டெக் - ஆங்கிலம்

DWBI டெக் - பிரஞ்சு

DWBI டெக் - ஜெர்மன்

DWBI சுருக்கம் - டச்சு

DWBI சுருக்கம் - ஆங்கிலம்

DWBI சுருக்கம்- பிரஞ்சு

DWBI சுருக்கம் - ஜெர்மன்

உலகளாவிய - DWBI விளக்கப்படம்

DWBI விளக்கப்படம் - ஆஸ்திரேலியா

DWBI விளக்கப்படம் - பிரான்ஸ்(FR)

DWBI விளக்கப்படம் - ஜெர்மனி(DE)

DWBI விளக்கப்படம் - இந்தியா

DWBI விளக்கப்படம் - இங்கிலாந்து

DWBI விளக்கப்படம் - அமெரிக்கா