அறம்
Appearance
அறம், .
- தருமம். (பிங். )
- புண்ணியம்
- அறம்பாவ மென்னு மருங்கயிற் றாற் கட்டி (திருவாச. 1, 52)
- தகுதியானது. (இறை. 29,)
- சமயம். (சீவக. 544.)
- ஞானம்
- அறத்தின் விருப்புச் சிறப்பொடு நுந்த (ஞானா. பாயி. 5)
- அறச் சாலை
- அறத்துக்குப் புறத்தன் (T.A.S. i, 9)
- நோன்பு. (சீவக. 386.)
- தீய பயனை உண்டாக்கும் சொல்
- அறம்விழப் பாடினான்.
- தருமதேவதை. (குறள், 77.)
- யமன். அறத்தின் மைந்தனுக்கு (பாரத. வாரணா. 112)
- சுகம். (சம். அக. Ms.)
- இதம்
- அறத்துறை மாக்க டிறத்திற் சாற்றி (சிலப். 14, 28).
- 27 ஓகங்களில் (யோகம்) ஒரு வகையான சுகர்மம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம், n.
- moral or religious duty, virtue, performance of good works according to the Šāstras
- merit
- That which is fitting, excellent
- Religious faith
- wisdom
- Feeding house
- fasting
- Letters or words in a verse which cause harm
- Goddess of virtue
- Yama
- happiness
- That which is salutary
- A type of 27 Yogas
விளக்கம்
- தர்மம், புண்ணியம், ஒழுக்கம், நோன்பு, தவம், ஆசாரம், சமயம்
- 27 ஓகங்களில் (யோகம்) ஒரு வகை.
- அறம் என்ற சொல்லின் அருகே அமர்ந்த சொல் அறுதல். அதுவே அதன் மொழி மூலமாக இருக்கலாம். அற்றம் என்றால் இறுதி. அற்றுபடி என்றால் திட்டவட்டம். அதாவது அறுத்துச் சொல்லுதல், வரையறைசெய்து சொல்லுதல், கடைசியாகச் சொல்லுதல் என்ற தொனியில் இச்சொல் பிறந்திருக்கலாம்.
- அறம்பாடுதல் என்கிறோம். பெரும் துன்பப்பட்ட கவிஞன் அதற்குக் காரணமானவர் அழியும்படியாகப் பாடும் பாடல். நந்திவர்ம பல்லவனை அவன் சகோதரன் அறம்பாடிக் கொன்றான் என்று நம் தொன்ம மரபு சொல்கிறது. அங்கே வரும் அறம் என்பது தர்மம் அல்ல. எதிக்ஸ் அல்ல. அது இறுதிதான். அறப்பாடுதல், அறும்படி பாடுதல். அற்றம் வரும்படி பாடுதலே அங்கே அறமாக சொல்லப்படுகிறது.
- அறம் என்பது இதுதான். ஒரு மனிதக்குழு தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் நெறிகள். இறுதியாக வகுத்துக் கொண்ட நடத்தைகள். செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை, செய்தே ஆகவேண்டியவை அடங்கிய ஒரு வழிகாட்டித்தொகை. அதுவே அறம். (அறமெனப்படுவது யாதெனின், ஜெயமோகன்)
- திருக்குறள் தரும் விளக்கம். குறள் எண் 35,
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
- மு. வ. உரை: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.