1192
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1192 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1192 MCXCII |
திருவள்ளுவர் ஆண்டு | 1223 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1945 |
அர்மீனிய நாட்காட்டி | 641 ԹՎ ՈԽԱ |
சீன நாட்காட்டி | 3888-3889 |
எபிரேய நாட்காட்டி | 4951-4952 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1247-1248 1114-1115 4293-4294 |
இரானிய நாட்காட்டி | 570-571 |
இசுலாமிய நாட்காட்டி | 587 – 588 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1442 |
யூலியன் நாட்காட்டி | 1192 MCXCII |
கொரிய நாட்காட்டி | 3525 |
1192 (MCXCII) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 7 – வெள்ளிக் கோள் வியாழனை மறைத்தது.
- ஏப்ரல் 28 – எருசலேம் மன்னர் முதலாம் கொன்ராட் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சில நாட்களில் கொல்லப்பட்டார்.
- செப்டம்பர் 2 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட், சலாகுத்தீன் ஆகியோருக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
- அக்டோபர் 9 – மூன்றாம் சிலுவைப் போர் முடிவுற்றது. எருசலேம் புனித நகருக்கு வரும் பயணிகளின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டது. இம்மாத்த்தின் இறுதியில் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் எருசலேமை விட்டுப் புறப்பட்டார்.
- டிசம்பர் 11 – மூன்றாம் சிலுவைப் போரின் முடிவில் நாடு திரும்பிய இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னர் ஆத்திரியக் கோமகன் ஐந்தாம் லெப்போல்டினால் கைது செய்யப்பட்டார்.
- இரண்டாவது தாரைன் போர் இந்தியாவில் இடம்பெற்றது. கோரி முகமதின் கூரிதுப் பேரரசுப் படைகள் பிருத்திவிராச் சௌகானை வென்றன.
- பெய்ஜிங்கில் மார்க்கோ போலோ பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
- சிசிலியர்களினால் 1911 இல் கைது செய்யப்பட்ட பேரரசி கான்ஸ்டன்சு திருத்தந்தையின் அழுத்தத்தை அடுத்து விடுவிக்கப்பட்டு செருமனி வந்தார்.
- எசுத்தோனியாவில் தார்த்து, அத்தெப்பா அரண்மனைகளை நொவ்கோரத் இளவரசர் யாரோசிலாவ் விளாதிமீரவிச் தீயிட்டுக் கொளுத்தினார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- பிருத்திவிராச் சௌகான், வட இந்திய மன்னர் (பி. 1149)
- சம்யுக்தா, கன்னோசி மன்னன் செயச்சந்திரனின் மகள். பிரித்திவிராஜின் காதல் மனைவி