துலக்கத்திறன்
Appearance
துலக்கத்திறன் (Responsivity) என்பது ஒரு கண்டுணர்வி கட்டகத்தின் உள்ளீடு-வெளியீடு ஈட்டத்தை அளப்பது ஆகும். ஒளிமின் கண்டுணர்வி ஒன்றை எடுத்துக்கொண்டால், அதில் ஒரு ஒளி உள்ளீடுக்கு வெளிவரும் மின்சாரத்தை அளந்து தருவது துலக்கத்திறன் ஆகும்.
ஒளிமின் கண்டுணர்வியின் துலக்கத்திறனின் அலகு படுமின் உமிழ்வுத் திறனின் ஒரு வாட்டுக்கு எத்தனை ஆம்பியர்கள் அல்லது வோல்ட்டுகள் என்பதனால் தரப்படும். நேரியலாக உள்ளீடு தரும் கட்டகத்திற்கு, தனி துலக்கத்திறன் உண்டு. நேரியலற்ற கட்டகத்திற்கு துலக்கத்திறன் உள்ளிட வகையீட்டு சரிவாக அமையும். பெரும்பாலான ஒளிமின் கண்டுணர்வி நேரியலில் படுமின் திறனின் சார்பாகத் துலங்கும்.