[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சா 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க திகில் திரைப்படம் [1] [2], ஜேம்ஸ் வான் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.மேலும் கேரி எல்வ்ஸ், டேனி குளோவர், மோனிகா பாட்டர், மைக்கேல் எமர்சன், கென் லியுங், டோபின் பெல் மற்றும் லே வன்னெல் ஆகியோர் நடித்துள்ளனர் . இது சா திரைப்படத் தொடரில் முதல் படம் ஆகும்.

தயாரிப்பாளர்களை ஈர்க்க, எழுதிய ஸ்கிரிப்டில் ஒரு காட்சியில் இருந்து "சா" என்ற பெயரில் குறைந்த பட்ஜெட்டில் குறும்படம் ஒன்றை படமாக்கினர் . இந்த திட்டம் வெற்றி பெற்றது 2003 ஆம் ஆண்டில் எவல்யூஷன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்கள் உடனடியாக "சா" படத்தை தயாரிக்க முன்வந்தனர். இந்த படத்திற்கு 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் எனும் சிறிய பட்ஜெட் வழங்கப்பட்டது மற்றும் 18 நாட்களில் இது படமாக்கப்பட்டது.

இப்படம் லயன்ஸ் கேட் பிலிம்ஸால் அக்டோபர் 29, 2004 இல் வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படம் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. 1.2 மில்லியன் டாலர் எனும் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூல் செய்தது. [3] சா 2 என்ற தலைப்பில் ஒரு தொடர்ச்சி 2005 இல் வெளியிடப்பட்டது.

வெளியீட்டு

[தொகு]

லைன்ஸ் கேட் உலகளவில் "சா" படத்தின் விநியோக உரிமையை சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் எடுத்துக்கொண்டது . [4]

பத்தாம் ஆண்டு மறு வெளியீடு

[தொகு]

அக்டோபர் 31, 2014 அன்று, படத்தின் 10 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஒரு வாரம் மீண்டும் இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

வரவேற்பு

[தொகு]

வசூல்

[தொகு]

"சா" திரைப்படம் ஆலோவின் வாரத்தில், சுமார் 2315 திரையரங்குகளில் வெளிவந்தது. இப்படம் முதல் வாரத்தில் 18.2 மில்லியன் டாலர்கள் வசூலித்தது.[5]இப்படம் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூல் செய்தது. [6] [7]

குறிப்புகள்

[தொகு]
  1. "Sundance Review". Reed Business Information. January 27, 2004 இம் மூலத்தில் இருந்து August 17, 2011 அன்று. பரணிடப்பட்டது.. http://www.variety.com/review/VE1117922951.html. பார்த்த நாள்: August 16, 2011. 
  2. "Saw. Motion Picture". United States Copyright Office. May 17, 2004. Archived from the original on August 17, 2011. பார்க்கப்பட்ட நாள் August 17, 2011.
  3. Vejvoda, Jim (August 28, 2014). "Saw returning to theatres for its 10th anniversary". IGN. News Corporation. பார்க்கப்பட்ட நாள் August 28, 2014.
  4. "Lions Gate Gets World Rights To Sundance Midnight Film "Saw"". Archived from the original on August 18, 2011. பார்க்கப்பட்ட நாள் August 17, 2011.
  5. "Weekend Box Office Results for October 29–31, 2004". பாக்சு ஆபிசு மோசோ. Amazon.com. November 1, 2004. பார்க்கப்பட்ட நாள் August 17, 2011.
  6. "'Ray,' 'Saw' See Robust Bows". Box Office Mojo. Amazon.com. November 1, 2004. பார்க்கப்பட்ட நாள் August 17, 2011.
  7. "Weekend Box Office Results for October 5–7, 2004". Box Office Mojo. Amazon.com. November 8, 2004. பார்க்கப்பட்ட நாள் August 17, 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சா&oldid=3315873" இலிருந்து மீள்விக்கப்பட்டது