[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குன்றி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
ஆ. பிரிகட்டோரியஸ்
இருசொற் பெயரீடு
ஆப்ரஸ் பிரிகட்டோரியஸ்
L

குன்றுமணி அல்லது குன்றிச் செடி (Jequirity) என்பது, ஆப்ரஸ் பிரிக்கட்டோரியஸ் (Abrus precatorius) என்னும் அறிவியற் பெயர் கொண்ட ஒரு கொடித் தாவரம் ஆகும். கடுமையான சிவப்பு நிறத்தில் கருமை நிறத்தில் ஒரு மறுவைக் கொண்ட கொண்ட இதன் விதை பொதுவாகக் குண்டுமணி என அறியப்படுகிறது. இச் சொல் குன்றிமணி என்பதன் திரிபு ஆகும். இதன் வேறு பெயர்கள்: குன்றி, குண்டு மணி, மனோசீலை, குன்று மணி, குன்றி வித்து. சிலர் நண்டின் கண்களுக்கு இதனை ஒப்பிடுவர். கவர்ச்சியான இந்த விதை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. எனினும் இதன் தோல் மிகவும் கடினமாக இருப்பதால், இதை முழுதாக விழுங்கினால் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.ஆனால் இவ் விதையை எரிப்பதனால் (நேரடியாகவே அல்லது வேறு ஏதேனும் பொருட்களுடன் ) ஏற்படும் புகைகை சுவாசிப்பதனால் நரம்பியல் சம்பந்தப்பட்ட சில நோய்களுக்கு காரணமாக உள்ளது.

சில பகுதிகளில் இம் மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டு. சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.

குன்றிமணியில் உள்ள நஞ்சு ஆப்ரின் (abrin) எனப்படுகிறது. இது ரைசின் (ricin) எனப்படும் நச்சுப் பொருளுக்கு நெருக்கமான உறவுடையது. இது இரு புரதத் துணை அலகுகளைக் கொண்ட ஒர் இருபடிச் சேர்மம் (dimer) ஆகும். இத் துணை அலகுகள் "எ", "பி" என அழைக்கப்படுகின்றன. "பி" சங்கிலி திசுள் (இலங்கை வழக்கு: கலம்) மென்சவ்வுகளில் இருக்கும் ஒருவகைக் காவிச் செல்லும் புரதங்களுடன் இணைந்து கொள்வதன் மூலம் ஆப்ரின் நஞ்சு திசுள்களுக்குள் செல்ல உதவுகிறது.

வகைகள்

[தொகு]
  1. வெண்மை குன்றுமணி
  2. செம்மை குன்றுமணி
  3. மஞ்சள் குன்றுமணி
  4. நீல குன்றுமணி
  5. கருமை குன்றுமணி
  6. பச்சை குன்றுமணி

மருத்துவ குணங்கள்

[தொகு]

இதன் விதைகள் நச்சுத் தன்மைக் கொண்டதால் மருத்துவத் துறையில் பயன்படுத்தும் முன்பு அதனை சரியான முறையில் சுத்தப்படுத்த வேண்டும்[1].

  1. இதன் இலைச் சாறு வாய்ப்புண் , இருமல், சளி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது.
  2. இலைச் சாறு வீக்கங்களை குறைக்கும்.
  3. இதன் வேர் விசக்கடிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

படங்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்றி&oldid=3048502" இலிருந்து மீள்விக்கப்பட்டது