இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா
குறிக்கோளுரை | विद्यार्थी लभते विद्याम |
---|---|
வகை | Public |
உருவாக்கம் | 2008 |
தலைவர் | G. Madhavan Nair |
பணிப்பாளர் | Anil K. Bhowmick |
மாணவர்கள் | 450+ |
அமைவிடம் | , , |
வளாகம் | Urban |
Acronym | IITP |
இணையதளம் | www.iitp.ac.in |
இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா (இ.தொ.க. பட்னா, IIT Patna அல்லது IITP ) இந்தியாவின் பீகார் மாநில தலைநகர் பட்னாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ஆறு இ.தொ.கழகங்களில் ஒன்றாகும்[1]. 2008-2009 கல்வியாண்டு முதல் பட்னாவின் பாடலிபுத்திரா காலனியில் அமைந்துள்ள நவீன் அரசு பல்தொழில்நுட்பப் பயிலக வளாகத்தில் இ.தொக.குவகாத்தி வழிகாட்டுதலில் இயங்கத் துவங்கியுள்ளது.[2]
வளாகம்
[தொகு]இ.தொ.க பட்னா ஜூலை 25,2008 அன்று பதிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 6, 2008[3] முதல் இ.தொ.க குவகாத்தி வழிகாட்டுதலில் இயங்குகிறது[4].
பட்னாவின் புறநகரில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் நிரந்தர அமைவிடம் கண்டறியப்பட்டுள்ளது.45000 ச.அடி கட்டிடப் பரப்பு கட்டுமானத்தில் உள்ளது. ஜூலை 2010 முதல் புதிய இடத்திலிருந்து இ.தொ.க இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடவருக்கும் மகளிருக்கும் இரு விடுதிகளும் தயார்நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி திட்டங்கள்
[தொகு]தனது முதலாண்டில்,2008-2009, மூன்று பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குகிறது:
இ.தொ.க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் கல்வித்திட்டங்களும் ஆய்வு திட்டங்களும் மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே வகுக்கப்படும்.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://timesofindia.indiatimes.com/articleshow/3335473.cms
- ↑ http://wikimapia.org/10375314/IIT-Patna
- ↑ http://www.iitg.ernet.in/Patna/iitp_admission_notice.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-08-07. பார்க்கப்பட்ட நாள் 2009-08-12.
வெளியிணைப்புகள்
[தொகு]