[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ரெய்க் கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெயிக்
ரெயிக் மலை
உயர்ந்த புள்ளி
உயரம்1,548 m (5,079 அடி)
புடைப்பு1,548 m (5,079 அடி)
பட்டியல்கள்
புவியியல்
அமைவிடம்மாமித் மாவட்டம், மிசோரம், இந்தியா
மூலத் தொடர்உலுசாய் மலைகள்

ரெய்க் மலை (Reiek) என்ற சுற்றுலா தளம் மிசோரம் தலைநகர் அய்ஸோலில் இருந்து 29 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது 1538 மீட்டர் உயரத்தில் அய்ஸோலை சுற்றியுள்ள மலைகலையும் பள்ளதாக்குகளை பார்ப்பதற்கு ஏற்றார்போல் அமைந்துள்ளது. வானம் தெளிவாக இருக்கும் சமயத்தில் இதன் உச்சியில் இருந்து பங்களாதேஷ் சமவெளிகளை காணமுடியும். ரெய்க் மலை முழுவதும் பசுமையான மிதவெப்ப மரங்களும், புதர்களுமே சூழ்ந்துள்ளன.[1]

மாதிரி கிராமம்

[தொகு]

ரெய்க்கில் உள்ள மாதிரி கிராமம் பல்வேறு மிசோ துணை பழங்குடியினரின் தனித்துவமான பாரம்பரிய வீடுகள் குடில்களைக் கொண்டது. மிசோ குழுத் தலைவரின் வீடு, மணமாகதவர்கள் மற்றும் விதவையின் தங்குமுறை ஆகியவற்றை உருவாக்கி பராமரித்து வருகிறது மிசோரம் மாநில சுற்றுலாத் துறை. வீடுகளும் அலங்கரிக்கப்பட்டு பார்வையாளர் வீரமிக்க மலையக மக்களின் போற்றுத்ல்குரிய கால கண்ணோட்டத்தை தருகிறது. நவீன வளர்ச்சியினால் மிசோக்களின் வாழ்க்கை முறை எத்தகைய மாற்றங்களை பெற்றுள்ளது என்பதை காட்டுவதற்காக சில நவீன மிசோ வீடுகளும் அருகினில் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறைக்கு ஒரு உணவகமும் தங்கும் வசதியும் உள்ள உல்லாசபோக்கிடமும் இங்குள்ளது.இங்குதான் வருடாந்திர அந்தூரியம் திருவிழா நடைபெறுகிறது. இங்கு வருவதற்கு ஏப்ரல் மாதம் தான் சிறந்த காலம்.

அந்தூரியம் திருவிழா

[தொகு]

அந்தூரியம் திருவிழா என்பது அந்தூரியம் பூக்கள் வளர்ப்பை ஊக்குவிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு மிசோக்களின் உயர்ந்த மரபுகளையும், வழக்கங்களை தெரியபடுத்தவும் ரெய்க் மலையில் நடத்தபடுகிறது. மத்திய அரசின் நிதி நல்கையின் கீழ் சுற்றுலாத் துறையும், தோட்ட கலைத் துறையும் சேர்ந்து ஆண்டுதோறும் இந்த அந்தூரியம் திருவிழா நடத்தபடுகிறது. அந்தூரிய பூக்கள் பயிரிடுதல், ஊக்குவித்தல் மற்றும் சந்தைபடுத்துதலோடு அழகான மிசோரமை பார்ப்பதற்கு அதிக சுற்றுலா பயணிகளை வரவைப்பது என இரு நோக்கங்களை இந்த திருவிழா கொண்டுள்ளது.

வனவிலங்கு

[தொகு]

ரெய்க் மலைகள் மனதை கவரும் பல வகையான பறவைகளின் வீடாக திகழ்கிறது, மிக உயரத்தில் பறக்கும் அரிய வகை வல்லூருக்களும் (Peregrine falcon) இதில் அடங்கும். வலது உச்சியில் பெரிய பாறாங்கல் போன்ற பெரிய பாறை வெளியே நீட்டி கொண்டிருக்கிறது. சுற்றுசூழல் மற்றும் வன துறையும் சேர்ந்து மலையேற்றம் மேற்கொள்ளும் பயணிகளை ஊக்குவிக்க உள்ளுர் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெய்க்_கிராமம்&oldid=2092357" இலிருந்து மீள்விக்கப்பட்டது