2012
2012 (MMXII) கிரெகோரியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை துவங்கும் ஒரு நெட்டாண்டு ஆகும். இது பொது ஊழி, (CE) மற்றும் அனோ டொமினியில் (AD) 2012 ஆம் ஆண்டு. 3ம் ஆயிரவாண்டு, மற்றும் 21ம் நூற்றாண்டில் 12வது ஆண்டு, 2010களில் 3வது ஆண்டும் ஆகும்.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2012 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2012 MMXII |
திருவள்ளுவர் ஆண்டு | 2043 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2765 |
அர்மீனிய நாட்காட்டி | 1461 ԹՎ ՌՆԿԱ |
சீன நாட்காட்டி | 4708-4709 |
எபிரேய நாட்காட்டி | 5771-5772 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2067-2068 1934-1935 5113-5114 |
இரானிய நாட்காட்டி | 1390-1391 |
இசுலாமிய நாட்காட்டி | 1433 – 1434 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 24 (平成24年) |
வட கொரிய நாட்காட்டி | 101 |
ரூனிக் நாட்காட்டி | 2262 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4345 |
இவ்வாண்டு குறித்து ஆன்மீக தோற்றமாற்றம் முதல் திருவெளிப்பாடு வரை ஏராளமான நம்பிக்கைகள் உலவி வந்தன. இவற்றில் இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியின் தொடர்ந்த நட்காட்டி முறையின் பல விளக்கங்கள் முக்கியமானவையாகும். ஆனாலும் திருவெளிப்பாடு பற்றிய விளக்கங்களை அறிவியலாளர்கள் ஆதாரமற்றவையாக மறுத்துள்ளனர்[1].
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 1 - எகிப்தில் கால்பந்துப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற வன்முறைகளில் 79 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 6 - இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா & நியூசிலாந்தின் அரியணையேறிய 60 வது ஆண்டு நிறைவை (அதேபோல் பொதுநலவாய நாடுகளின் தலைவராக அவர் ஆனதின் 60வது ஆண்டு நிறைவையும்) குறிக்கும் விதமாக, அவருக்கு வைர விழா கொண்டாட்டம் இடம்பெற்றது.
- பெப்ரவரி 13 - ஐக்கிய நாடுகள் கல்வி, சமூக, பண்பாட்டு நிறுவன தீர்மானப்படி உலக வானொலி நாள் என முதன் முதல் கடைபிடிக்கப்பட்டது.
- பெப்ரவரி 15 - ஒந்துராசு சிறை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 360 பேர் இறந்தனர்.
- மார்ச் 9 - இந்தியாவில் பாஷ்மினா ஆடு என்ற ஆட்டைப் போல் குளோனிங் முறையில் நூரி என்ற ஆடு உற்பத்தி செய்யப்பட்டது.
- மார்ச் 13 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் தனது அச்சுப் பதிப்பை நிறுத்திக் கொண்டது.
- மார்ச் 22 - மாலியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசுத்தலைவர் அமடூ தவுரே பதவியிழந்தார்.
- ஏப்ரல் 6 - அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் மாலியில் இருந்து அசவாத் விடுதலை பெற்றதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.
- ஏப்ரல் 26 - முன்னாள் லைபீரிய அரசுத்தலைவர் சார்ல்சு டெய்லர் சியேரா லியோனி உள்நாட்டுப் போரில் போர்க்குற்றம் இழைத்ததாக அறிவிக்கப்பட்டார்.
- மே 2 - நோர்வே ஓவியர் எட்வர்ட் மண்ச்சின் அலறல் (ஓவியம்) ஓவியம் US$120 million in a நியூயார்க்கில் 120 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போய் உலக சாதனை படைத்தது.
- மே 22 - டோக்கியோ இசுக்கை றீ திறந்து வைக்கப்பட்டது.
- சூன் 5 - 6 - நூற்றாண்டின் இரண்டாவதும் கடைசியுமான வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு இடம்பெற்றது. அடுத்த நிகழ்வு 2117, 2125 இல் நிகழும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
- சூலை 27 - ஆகத்து 12 - 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இலண்டனில் இடம்பெற்றன.
- ஆகத்து 6 - கியூரியோசிட்டி, செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் செவ்வாய்க் கோளில் இறங்கியது.
இறப்புகள்
தொகு- சனவரி 2 - கே. ஜே. சரசா, பரதநாட்டியக் கலைஞர்
- சனவரி 8 - அடிகளாசிரியர், தமிழறிஞர் (பி. 1910)
- சனவரி 9 - எஸ். எம். அன்சார், ஈழத்துக் கவிஞர்
- சனவரி 17 - எம். எஸ். பொன்னுத்தாய், நாதசுரக் கலைஞர்
- சனவரி 20 - எட்டா ஜேம்சு, அமெரிக்கப் பாடகர் (பி. 1938)
- சனவரி 26 - பாரூக் மரைக்காயர், தமிழக அரசியல்வாதி (பி. 1937)
- சனவரி 30 - இடிச்சப்புளி செல்வராசு, நகைச்சுவை நடிகர்
- பெப்ரவரி 1 - விஸ்லவா சிம்போர்ஸ்கா, போலந்து நோபல் கவிஞர் (பி. 1923)
- பெப்ரவரி 5 - தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர் (பி. 1938)
- பெப்ரவரி 9 - ஹெப்சிபா ஜேசுதாசன், தமிழக எழுத்தாளர்
- பெப்ரவரி 11 - விட்னி ஊசுட்டன், அமெரிக்க நடிகை (பி. 1963)
- பெப்ரவரி 20 - எஸ். என். லட்சுமி, நடிகை (பி. 1934)
- பெப்ரவரி 20 - ரா. கணபதி, எழுத்தாளர், தமிழறிஞர்
- பெப்ரவரி 21 - முத்துராஜா, நகைச்சுவை நடிகர்
- மார்ச் 10 - பிராங்க் செர்வுட் ரோலண்ட், அமெரிக்க நோபல் வேதியியலாளர் (பி. 1927)
- மார்ச் 11 - த. ஆனந்தமயில், ஈழத்து எழுத்தாளர் (பி. 1947)
- மார்ச் 21 - யாழூர் துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1946)
- மார்ச் 23 - இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர் (பி. 1940)
- ஏப்ரல் 1 - எஸ். பி. முத்துக்குமரன், தமிழக அரசியல்வாதி (பி. 1968)
- ஏப்ரல் 2 - எம். சரோஜா, நடிகை
- ஏப்ரல் 4 - கிருஷ்ணா டாவின்சி, எழுத்தாளர், நடிகர் (பி. 1968)
- ஏப்ரல் 10 - என். வரதராஜன், தமிழக அரசியல்வாதி (பி. 1924)
- ஏப்ரல் 19 - நூரானியா ஹசன், இலங்கை வானொலி அறிவிப்பாளர் (பி. 1964)
- ஏப்ரல் 20 - சண்முகம் சிவலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1936)
- மே 1 - சண்முகசுந்தரி, நடிகை
- மே 5 - இராய் படையாச்சி, தென்னாப்பிரிக்கத் தமிழ் அரசியல்வாதி (பி. 1950)
- மே 24 - பாலாம்பிகை நடராசா, ஈழத்து எழுத்தாளர்
- மே 25 - திலீப், நடிகர்
- சூன் 5 - ரே பிராட்பரி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1920)
- சூன் 12 - எலினோர் ஒசுட்ரொம், அமெரிக்க நோபல் பொருளியல் நிபுணர் (பி. 1933)
- சூன் 14 - காகா இராதாகிருஷ்ணன், நகைச்சுவை நடிகர்
- சூன் 19 - ராபின் மெக்கிலாசன், ஆங்கிலேயத் தமிழறிஞர்
- சூலை 8 - ஏ. எஸ். ராகவன், தமிழக எழுத்தாளர் (பி. 1928)
- சூலை 12 - தாரா சிங், மற்போர் வீரர் (பி. 1928]]
- சூலை 12 - மா. ஆண்டோ பீட்டர், மென்பொருள் இயக்குனர் (பி. 1967)
- சூலை 16 - இசுடீபன் கோவே, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1932)
- சூலை 18 - ராஜேஷ் கன்னா, இந்தி நடிகர் (பி. 1942)
- சூலை 22 - டொன் பொஸ்கோ, இலங்கை நடிகர்
- சூலை 23 - இலட்சுமி சாகல், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1914)
- சூலை 23 - சாலி றைட், அமெரிக்க விண்வெளிவீரர் (பி. 1951)
- சூலை 24 - ஜோன் அட்டா மில்ஸ், கானா அதிபர் (பி. 1944)
- ஆகத்து 2 - அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)
- ஆகத்து 18 - ரா. கி. ரங்கராஜன், தமிழக எழுத்தாளர், பி. 1927)
- ஆகத்து 25 - நீல் ஆம்ஸ்ட்றோங், அமெரிக்க விண்வெளிவீரர் (பி. 1930)
- ஆகத்து 26 - த. சரவணத் தமிழன், தமிழறிஞர்
- செப்டம்பர் 9 - சங்கர் சங்கரமூர்த்தி, பிபிசி தமிழோசை ஒலிபரப்பாளர்
- செப்டம்பர் 16 - லூசு மோகன், நகைச்சுவை நடிகர் (பி. 1928)
- அக்டோபர் 1 - எரிக் ஹாப்ஸ்பாம், பிரித்தானிய மார்க்சிய வரலாற்றாளர் (பி. 1917)
- அக்டோபர் 6 - ம. ரா. போ. குருசாமி, தமிழறிஞர் (பி. 1922)
- அக்டோபர் 7 - ஏ. ஜெகன்னாதன், இயக்குனர்
- அக்டோபர் 15 - நொரடோம் சீயனூக், கம்போடிய அரசர் (பி. 1922)
- அக்டோபர் 21 - யஷ் சோப்ரா, இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1932)
- நவம்பர் 4 - ஜேக்கப் சகாயகுமார் அருணி, சமையல்கலை நிபுணர் (பி. 1974)
- நவம்பர் 17 - பால் தாக்கரே, இந்திய அரசியல்வாதி (பி. 1926)
- நவம்பர் 30 - ஐ. கே. குஜரால், 12வது இந்தியப் பிரதமர் (பி. 1919)
- டிசம்பர் 5 - ஒசுக்கார் நிமேயெர், பிரேசில் கட்டிடக்கலை நிபுணர் (பி. 1907)
- டிசம்பர் 11 - ரவி சங்கர், இந்திய சித்தார் நிபுணர் (பி. 1920)
- டிசம்பர் 13 - கர்ணன், ஒளிப்பதிவாளர், இயக்குநர்
- டிசம்பர் 28 - எஸ். செல்வசேகரன், ஈழத்து வானொலிக் கலைஞர், நாடக நடிகர்
நோபல் பரிசுகள்
தொகுமுக்கிய மதரீதியான விடுமுறை நாட்கள்
தொகு- ஜனவரி 7 - ஜூலியன் காலண்டரின் படி கிறிஸ்துமஸ் தினம் (கிழக்கத்திய ஆர்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது)
- பிப்ரவரி 1 - இம்போல்க், ஒரு கிராஸ்-குவார்ட்டர் தினம் (சில இடங்களில் பிப்ரவரி 2 அன்று கொண்டாடப்படுகிறது)
- பிப்ரவரி 5 - மாவ்லித் அன் நபி - இஸ்லாம்
- மார்ச் 8 – பூரிம் – யூதம்
- மார்ச் 8 – ஹோலி – இந்து மதம்
- மார்ச் 20 – ஸ்பிரிங் இக்வினாக்ஸ், பெர்சியன் புத்தாண்டு (நௌரஸ்), ஓஸ்டரா என்றும் அறியப்படுகிறது
- ஏப்ரல் 1 – ராமநவமி – இந்து மதம்
- ஏப்ரல் 6 – அனுமன் ஜெயந்தி – இந்து மதம்
- ஏப்ரல் 7 – பாஸ்ஓவர் – யூதம்
- ஏப்ரல் 8 – ஈஸ்டர் – மேற்கத்திய கிறிஸ்தவம்
- ஏப்ரல் 15 – ஈஸ்டர் – கிழக்கத்திய கிறிஸ்தவம்
- மே 1 – பெல்டான், ஒரு கிராஸ்-ஓவர் தினம்
- மே 27 – ஷவாத் – யூதம்
- ஜூன் 17 – லைலத் அல் மிராஜ் – இஸ்லாம்
- ஜூன் 20 – கோடை சங்கராந்தி, மிட்சம்மர் என்றும் அறியப்படுகிறது
- ஜூலை 20 – ரமலான் துவங்குகிறது – இஸ்லாம்
- ஆகத்து 1 – லாமாஸ், ஒரு கிராஸ்-குவார்ட்டர் தினம்
- ஆகத்து 2 – ரக்ஷா பந்தன் – இந்து மதம்
- ஆகத்து 10 – ஜென்மாஷ்டமி – இந்து மதம்
- ஆகத்து 19 – ஈத் அல் ஃபித்ர் – இஸ்லாம்
- செப்டம்பர் 17 – ரோஷ் ஹசானா – யூதம்
- செப்டம்பர் 21 – ஃபால் ஈக்வினாக்ஸ், மபோன் என்றும் அறியப்படுகிறது
- அக்டோபர் 1 – சுகோட் – யூதம்
- அக்டோபர் 2 – மெரிகான் – ஸொராஸ்டிரியானிசம் மற்றும் பெர்சிய கலாச்சாரம்
- அக்டோபர் 24 – விஜய தசமி/தசரா – இந்துமதம்
- அக்டோபர் 26 – ஈத் அல்-அதா, இஸ்லாமில் ஒரு மதப் பண்டிகை
- நவம்பர் 1 – சமெய்ன், ஒரு கிராஸ்-குவார்ட்டர் தினம், நியோபகன் புத்தாண்டு மற்றும் கிறிஸ்தவ அனைத்து புனித துறவிகள் தினம்
- நவம்பர் 13 – தீபாவளி – இந்துமதம்
- நவம்பர் 15 – இஸ்லாமிய புத்தாண்டு
- டிசம்பர் 9 – ஹனுக்கா – யூதம்
- டிசம்பர் 21 – குளிர்கால சங்கிராந்தி, யூல் என்றும் அறியப்படுகிறது
- டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ் – மேற்கத்திய கிறிஸ்தவம்