1974
1974 (MCMLXXIV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 10 – யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 1 – பிரேசில், சாவோ பாவுலோ நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் 177 பேர் உயிரிழந்தனர்.[1]
- பெப்ரவரி 1 – மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.
- மார்ச்சு 3 – பாரிசில் இருந்து இலண்டன் நோக்கிச் சென்ற துருக்கிய பயணிகள் வானூர்தி பாரிசு அருகே வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 346 பேரும் உயிரிழந்தனர்.
- மே 18 - சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
- சூலை 7 - மேற்கு செருமனி 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தைத் தோற்கடித்து உலக காற்பந்து உலகக் கிண்ணத்தை வென்றது.
- ஆகத்து 8 - அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் வாட்டர்கேட் ஊழல் காரணமாகப் பதவி விலகினார்.
- ஆகத்து 14 - சென்னையில் குதிரைப் போட்டிக்கு தடை உத்தரவை அரசு பிறப்பித்தது.
பிறப்புகள்
தொகு- சனவரி 27 - சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாட்டக்காரர்
- சூன் 7 - மகேஷ் பூபதி, இந்திய டென்னிசு வீரர்
- டிசம்பர் 19 - றிக்கி பொன்ரிங், ஆத்திரேலியத் துடுப்பாளர்
இறப்புகள்
தொகு- சனவரி 4 - ஜி. டி. நாயுடு, இந்திய அறிவியலாளர் (பி. 1893)
- பெப்ரவரி 15 - கொத்தமங்கலம் சுப்பு, எழுத்தாளர், நடிகர் (பி. 1910)
- மார்ச் 7 - சந்திரபாபு, நடிகர் (பி. 1927)
நோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் – மார்ட்டின் ரைல், அந்தோனி இயூவிசு
- வேதியியல் – பவுல் புளோரி
- மருத்துவம் – ஆல்பர்ட் குளோட், கிறித்தியான் தெ துவே, ஜார்ஜ் பலாட்
- இலக்கியம் – ஐவிந்து ஜான்சன், ஹரி மார்ட்டின்சன்
- அமைதி – சான் மெக்பிரைட், ஐசாக்கு சாட்டோ
- பொருளியல் – கன்னார் மிர்தால், பிரீட்ரிக் கையக்
இவற்றையும் பார்க்கவும்
தொகு1974 நாட்காட்டி
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ Fire Journal. National Fire Protection Association. 1974. pp. 23–25.