1948
1948 (MCMXLIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1948 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1948 MCMXLVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1979 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2701 |
அர்மீனிய நாட்காட்டி | 1397 ԹՎ ՌՅՂԷ |
சீன நாட்காட்டி | 4644-4645 |
எபிரேய நாட்காட்டி | 5707-5708 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2003-2004 1870-1871 5049-5050 |
இரானிய நாட்காட்டி | 1326-1327 |
இசுலாமிய நாட்காட்டி | 1367 – 1368 |
சப்பானிய நாட்காட்டி | Shōwa 23 (昭和23年) |
வட கொரிய நாட்காட்டி | 37 |
ரூனிக் நாட்காட்டி | 2198 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4281 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 1 - ஐக்கிய இராச்சியம் தொடருந்து சேவையை நாட்டுடைமை ஆக்கியது.
- ஜனவரி 4 - பர்மா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- ஜனவரி 30 - மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார்.
- ஜனவரி 30 - சுவிட்சர்லாந்தில் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
- பெப்ரவரி 4 - இலங்கை விடுதலை அடைந்தது.
- பெப்ரவரி 25 - செக்கோஸ்லவாக்கியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
- மார்ச் 20 - சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
- ஏப்ரல் 7 - ஐக்கிய நாடுகள் அவையினால் உலக சுகாதார தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.
- மே 14 - இஸ்ரேல் விடுதலைப் பிரகடனம் அறிவித்தது.
- ஜூன் 18 - கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையொட்டி மலேசியாவில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.
- ஜூன் 28 - ஜப்பானில் Fukui என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,895 கொல்லப்பட்டனர்.
- ஜூலை 29 - லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
- ஆகஸ்ட் 15 - கொரியக் குடியரசு உருவாக்கப்பட்டது.
- செப்டம்பர் 12 - இந்திய இராணுவம் ஐதராபாத்தில் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 26 - கடைசி சோவியத் இராணுவம் வட கொரியாவில் இருந்து விலகியது.
பிறப்புகள்
தொகு- சனவரி 7 - இசிரோ மிசுகி, சப்பானிய நடிகர்
- பெப்ரவரி 4 - ராம் பரன் யாதவ், நேபாள அரசுத்தலைவர்
- பெப்ரவரி 5 - டாம் வில்கின்சன், ஆங்கிலேய நடிகர்
- பெப்ரவரி 24 - ஜெ. ஜெயலலிதா, தமிழக முதல்வர்
- மார்ச் 31 - ஆல் கோர், அமெரிக்க அரசியல்வாதி
- மே 14 - பாப் வுல்மர், பிரித்தானிய துடுப்பாட்டப் பயிற்சியாளர் (இ. 2007)
- செப்டம்பர் 3 - லெவி முவனவாசா, சாம்பிய அரசுத்தலைவர் (இ. 2008)
- அக்டோபர் 13 - நுசுரத் பதே அலி கான், பாக்கித்தானிய இசைக்கலைஞர் (இ. 1997)
- அக்டோபர் 17 - ராபர்ட் ஜோர்டான், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
- நவம்பர் 5 - பாப் பார், அமெரிக்க அரசியல்வாதி
- நவம்பர் 12 - அசன் ரவ்கானி, ஈரானின் 7வது அரசுத்தலைவர்
- நவம்பர் 14 - சார்லசு, வேல்சு இளவரசர்
- நவம்பர் 26 - எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்றவர்
- டிசம்பர் 21 - சாமுவேல் எல். ஜாக்சன், ஆப்பிரிக்க-அமெரிக்க நடிகர்
இறப்புகள்
தொகு- ஜனவரி 30 - மகாத்மா காந்தி (பி. 1869)
- ஜனவரி 30 - ஓர்வில் ரைட், விமானத்தைக் கண்டுபிடித்த சகோதரர்களில் ஒருவர் (பி. 1871)
- சூன் 12 - சிபில் கார்த்திகேசு, இரண்டாம் உலகப்போரில் பங்குபற்றிய மலேசியப் பெண் (பி. 1899)
- செப்டம்பர் 11 - முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானை உருவாக்கியவர் (பி. 1876)
நோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - [பட்ரிக் பிளாக்கெட்
- வேதியியல் - ஆர்ன் டிசேலியஸ்
- மருத்துவம் - போல் முல்லர்
- இலக்கியம் - டி. எஸ். எலியட்
- அமைதி - வழங்கப்படவில்லை